திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியில் உள்ள பிரபல நிறுவனத்தில் Shift Incharge Supervisor வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வந்துள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
வேலைவாய்ப்பு நிறுவனத்தின் விவரம் :
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியில் உள்ள பிரபல நிறுவனம் Smart Tech Engineering Services Private Limited என்ற ஒரு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பல நூறு கணக்கான வேலையாட்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த நிறுவனத்தில் தற்போது பணி மாற்று பார்வையாளர் அதாவது Shift Incharge Supervisor வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.
Shift Incharge Supervisor வேலைக்குத் தேவைப்படும் மொத்த வேலையாட்கள் விவரம்:
இந்த ஸ்மார்ட் டெக் இன்ஜினியரிங் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மொத்தம் ஆறு நபர்கள் மட்டும்தான் தேவைப்படுகிறார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கண்டிப்பாக இந்த வேலையை உங்களுக்கு கிடைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. அதனால் ஆறு வேலை வாய்ப்பு தானே என்று சாதாரணமான விண்ணப்பிக்காமல் இருந்து விடாதீர்கள்.. அவரவர்கள் கல்வி தகுதிக்கு ஏற்ப இந்த வேலையை நிச்சயம் கிடைக்கும். இப்பொழுது இந்த வேலைக்கான கல்வி தகுதி என்னவென்று பார்ப்போம்.
கல்வித் தகுதி விவரம் :
இந்த நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள Shift Incharge Supervisor வேலைக்கான கல்வி தகுதி என்னவென்றால் இன்ஜினியரிங் சம்பந்தப்பட்ட டிப்ளமோ (Diplamo) முடித்திருந்தால் போதுமானது. (அதிலும் குறிப்பாக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பான Mech / EEE முடித்திருந்தால் மிகவும் சிறப்பு. ) இந்த கல்வி தகுதிகள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க போதுமானது.
வேலையைப் பற்றிய விவரம் :
இந்த சூப்பர்வைசர் வேலை என்பது அவ்வளவு கடினமான வேலை கிடையாது. ஏற்கனவே நிறுவனத்தின் பல சூப்பர்வைசர்கள் இருப்பார்கள். நீங்கள் அவர்களுக்கு சூப்பர்வைசர் வேலையை பிரித்து வழங்குவதுதான் உங்கள் வேலை. அதாவது காலை பணி இரவு பணி என்று இரண்டு பணியும் இந்த நிறுவனத்தில் இருக்கிறது.
எப்படி என்றால், காலை நேரத்தில் காலைப் பணிக்கு வேலைக்கு வருபவர்கள் வரலாம் அல்லது மாலை நேரத்தில் இரவுப் பணிக்கு வேலைக்கு வருபவர்களும் இந்த நிறுவனத்திற்கு வரலாம். அதன்படி இந்த காலைப் பணி, இரவுப் பணி இரண்டிலும் வேலைக்கு வரும் சூப்பர்வைசர்களை ஒழுங்குப்படுத்தி நிர்வகிப்பது தான் இந்த Shift Incharge Supervisor வேலையின் முக்கிய அம்சம்.
பாலின விவரம் :
இந்த வேலைக்கு ஆண்கள் மட்டுமல்லாமல் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண் பெண் பாகுபாடு இல்லாது அனைவருக்கும் தகுதிக்கேற்ப திறமைக்கேற்ப வேலை வழங்கப்படுகிறது.
வயதுவரம்பு விவரம் :
இந்த வேலைக்கு 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். 18 வயதுக்கு குறைவாக உள்ள யாரும் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் விண்ணப்பங்கள் அல்லது அழைப்புகள் அனைத்தையும் இந்த நிறுவனம் ஏற்றுக்கொள்ளாது. ஏனென்றால் குழந்தை தொழிலாளர்களை இந்த நிறுவனத்தின் பணிப்புரிய அனுமதிப்பதில்லை.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் இடங்கள் விவரம் :
இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுக்க உள்ள டிப்ளமோ இன்ஜினியரிங் படித்த ஆண் பெண் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு முழுக்க இவர்கள் வேலையாட்கள் தேடுகிறார்கள்.
பணி செய்யும் இடத்தின் விவரம் :
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியில் உள்ள Smart Tech Engineering Services Private Limited இந்த நிறுவனத்தில் தான் நீங்கள் வேலை செய்ய போகிறீர்கள்; வேறு எங்கும் இவர்களுக்கு கிளைகள் கிடையாது. ஆதலால் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு நிறுவனத்திற்கு அருகில் தங்கி வேலை செய்யலாம்.
சம்பளம் விவரம் :
இந்த நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலைக்கு எவ்வளவு சம்பளம் வழங்க இருக்கிறார்கள் என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பது புரிகிறது. இந்த Smart Tech Engineering Services Private Limited நிறுவனத்தில் Shift Incharge Supervisor பணியில் சேரும் வேலையாட்கள் அனைவருக்கும் ஆரம்பத்தில் மாதம் 10,000 ரூபாயிலிருந்து 13,000 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.
ஆதலால் நீங்கள் சம்பளத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை. இவ்வளவு குறைவான சம்பளமாக இருக்கிறதே என்று நீங்கள் வருத்தப்பட வேண்டாம்; இது வெறும் ஆரம்ப சம்பளம் மட்டுமே மாதம் ஆக ஆக உங்கள் திறமைக்கேற்ப ஊதிய உயர்வு கட்டாயம் வழங்கப்படும்.
மேலும் வேலையாட்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் :
மேலே குறிப்பிட்டுள்ள படி குறைவான சம்பளம் வழங்குகிறார்களே எப்படி வேலை செய்வது என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் இவ்வளவு குறைவான சம்பளம் தருவதற்கு மற்றொரு காரணமும் உண்டு.
வேலையாட்களை எந்த ஒரு சிரமமும் படுத்தாமல் அவர்களை சுகமாக ஆர்வத்தோடு வேலை செய்ய தூண்டும் விதத்தில் இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி,
- கட்டணமில்லா தங்கும் வசதி வழங்கப்படுகிறது. இதனால் நீங்கள் வேலைக்கு சேர்ந்த பிறகு வெளியே சென்று அறை எடுத்து தங்க வேண்டிய அவசியம் கிடையாது. அதற்கான வீண் செலவும் குறைகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தை தவிர வெளி மாவட்டங்களில் இரந்து வேலைக்கு வருபவர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.
- கட்டணமில்லா உணவு வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலமாக தங்குவதற்கு இடம் கொடுத்து விட்டீர்கள்? உணவுக்கு என்ன செய்வது? மூன்று வேளை சாப்பாட்டுக்கு நாங்களே சமைத்து சாப்பிட வேண்டுமா? அல்லது வெளியே உணவகத்திற்கு சென்று சாப்பிட வேண்டுமா? என்று உங்களுக்கு கேள்விகள் எழும். அதற்காகவே கட்டணம் இல்லாமல் மூன்று வேலையும் உங்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதன் மூலமாக உணவு தேவையும் தங்கும் வசதி தேவையும் குறைகிறது. இந்த அனைத்து தேவைகளையும் இந்த நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது. ஆதலால் உங்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் எந்த விதத்திலும் செலவாகாது.
- இது மட்டுமல்லாமல் நீங்கள் நிறுவனத்திற்கு தயாரிக்கும் எந்த ஒரு பொருளுக்கும் அதன் தயாரிக்கும் அளவு உற்பத்தியை அதிகரித்து நிறுவனத்திற்கு பெரிதளவு உதவி செய்தீர்கள் மற்றும் பொருள்களின் தரத்தை உயர்த்துவதற்கு பெரும் முயற்சி செய்தீர்கள் என்றால் அதற்கேற்ப சன்மானமும் வழங்கப்படுகிறது.
- நீங்கள் வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு தாண்டி அதிக அளவு வேலையைத் தொடர்ந்தால் அதிகளவு சம்பளமும் வழங்கப்படுகிறது. அதாவது OT (Over Time) சலுகையும் வழங்கப்படுகிறது. இதன்படி ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் வேலை செய்து ₹500 ரூபாய் என்றால் நீங்கள் எட்டு மணி நேரம் 10 மணி நேரம் வேலை செய்து ₹800 ரூபாயோ ₹1000 ரூபாயோ உழைப்புக்கு ஏற்ப வாங்கிச் செல்லலாம்.
- இது மட்டுமல்லாது PF, ESI மூலம் பென்ஷன் பணமும் வழங்கப்படுகிறது.
- இது மட்டுமல்ல நீங்கள் தங்கும் இடத்திலிருந்து நிறுவனத்திற்கு எந்த வாகனத்தில் வருகிறீர்களோ அந்த வாகனத்திற்கு ஏற்ப பெட்ரோல் செலவுகள் நிறுவனமே பார்த்துக் கொள்கிறது. அதற்கான பணம் (Allowance)அன்று அன்று வழங்கப்படுகிறது.

